“இஸ்லாமிய திருமணம்” என்ற அந்தஸ்த்தை பெரும் திருமணம்
தவிர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்திற்கு புறம்பானவை
- மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.
- திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு மருதாணி இடுதல், நலங்கிடல் என்ற பெயரில் சடங்கு செய்தல்.
- கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.
- மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.
- மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல்,
- ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.
- மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.
- மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.
- மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.
- மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
- நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.
- மேடை அலங்காரம், மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.
- சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.
- திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.
- மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.
இந்த சடங்குகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு செய்யப்படும் திருமணங்களே இஸ்லாமிய திருமணம் என்ற அந்தஸ்தைப் பெரும்.
இஸ்லாத்திற்கு மாற்றமாக இது மாதிரியான திருமணங்களை புறக்கணித்து சமுதயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
0 comments:
Post a Comment